வணக்கம் நண்பர்களே!
இன்று முதல் உங்கள் கணணிகளில் உங்களோடு ஒரு வலைப்பதிவாளனாக இணைவதில்
சந்தோஷமடைகிறேன். எல்லா ப்ளாக் களிலும் உள்ள விஷயங்களில் இருந்து கொஞ்சம்
மாறுபட்டதாக இந்த Vithyan 's இருக்கவேண்டும் என ஆசைபட்டே இதை
ஆரம்பிக்கிறேன். (இப்டி தான் பா எல்லா பயபுள்ளையும் ஸ்டார்ட் பண்ணும்).
எனக்கு பிடித்த துறைகள் மட்டுமில்லாது ஏதாவது வினோதமான விஷயங்களையும்
பகிர்ந்து கொள்ள இது ஒரு வாய்ப்பாக அமையும்.
கண்டிப்பாக சினிமா ,கிரிக்கெட் மற்றும் விஞ்ஞானம் தொடர்பான விஷயங்களில்
நிறைய எழுததான் விருப்பபடுகிறேன் . ஆனாலும் வேறு துறைகளில் ஏதாவது
உருப்படியான தகவல் கிடைத்தால் நிச்சயம் பதிவு பண்ணப்படும். முடிந்த
அளவுக்கு அரசியல் விஷயங்களை தவிர்க்கவே விரும்புகிறேன். ( ஆனா எங்க நம்ம
கை சும்மா இருக்காதே).
என்னை பற்றி:
இப்போதைக்கு பேராதனை பல்கலைக்கழகத்தில் உணவு விஞ்ஞானம் மற்றும்
தொழிநுட்பத்தில் இறுதி வருட மாணவன் என சொல்லிக்கலாம். ( இன்னிக்கு தான்பா
தொடங்குது) . பகுதி நேர தனியார் வகுப்பு ஆசிரியர் வேலை வேறு. அதனால் உயர்
தர ,சாதாரண தர மாணவர்களுக்கு பிரயோசனமாகவும் எழுத முடியும் என
நினைக்கிறேன். ( இந்த intro போதும் இல்லையா?) ..
சரி எல்லா பதிவாளர்களும் கடைசியாக கேக்குற விஷயத்த இங்கயும் போட்டு
வாழ்த்தி ஆசிர்வாதம் பண்ணிட்டு போனா புண்ணியமா இருக்கும்..உங்க ஆதரவு
இல்லாம எதுவும் இல்ல. உங்களுக்கு தெரிஞ்ச மத்தவங்களுக்கும்
தெரியபடுத்துங்க
நன்றிகளுடன்
N.வித்யராஜன்
welcome from மகரன்...!
ReplyDeleteரொம்ப நன்றி மகரன்...நான் blog ஒன்று ஆரம்பிக்கிறதுக்கு நீங்களும் ஒரு காரணம்
ReplyDelete