Pages

Monday, November 14, 2011

சர்வதேச நீரிழிவு தினம்: நாங்க என்ன தெரிஞ்சிக்கணும்



இதுக்கு வாழ்த்து சொல்றது அவ்வளவு நல்லதா படல. அதனால இந்திய சிறுவர் தின நல்வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன். ( உலகமெல்லாம் அக்டோபர் முதலாம் திகதி சிறுவர் தினமா கொண்டாடினாலும், ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இந்தியாவிலே இன்னக்கி தான் அப்டிங்கிறது கூடுதல் தகவல்).
சரி நாங்க விஷயத்துக்கு வருவோம். நீரிழிவு நோய் இல்லாட்டி சக்கரை வியாதி என சொல்ற இந்த நோய பத்தி ஏதோ நான் கத்துகிட்டத உங்களோட பகிர்ந்துக்கறேன்.

( இவரும் நம்மாளு தான்)

உங்களுக்கெல்லாம் தெரியும் நம்ம உடம்புக்குள்ள நிறைய கலங்கள் cells இருக்குது. இதுக்குள்ள தான் நம்முடைய உடம்புல நடக்கிற நிறைய தொழிற்பாடுகள் (process) நடக்குது. உதாரணத்துக்கு சுவாசம் (respiration) நடக்கிறது கூட cells குள்ள தான். சுவாசம்ன்னா நாங்க சாப்பிடுற சாபாட்டுல இருக்குற கார்போஹைட்ரேட் (carbohydrate)(பெரும்பாலும்), லிபிட் (lipid), புரதம் (protein) மாதிர்யான மூலப்பொருட்கள உடைச்சு (இதுக்கு ஒக்சீஜன் உதவுது), பெரிய ஒரு செயன்முறை மூலமா சிறிய மூலக்கூறுகளா உடைக்குது. இதுல ஒரு விளைவா கிடைக்கிறது தான் ATP. இதுல இருந்து தான் சக்தி கிடைக்குது. (........அப்பாடியப்பா)

இந்த கார்போஹைட்ரேட் இரத்ததுல இருந்து cells குள்ள போகனும்னா insulin (இப்பவாவது விஷயத்துக்கு வந்தானே) என்ற ஹோமொன் ரொம்ப அவசியம். இல்லாட்டி cells அ சுத்தி வர கார்போஹைட்ரேட் இருந்தும் கூட cells பட்டினி கிடக்கும். இத ஆங்கிலத்துல “starvation amidst of plenty” (தொர இங்க்லீஷ் எல்லாம் பேசுது) அப்படின்னு சொல்லுவாங்க. நாங்க விரத நேரத்துல சுதி வர லட்டு, கேசரி எல்லாம் வெச்சிகிட்டு பட்டினி இருக்குறமாதிரி தான். அப்போ இரத்ததுல கார்போஹைட்ரேட் அதாவது சக்கரை இருந்தும் அது பயன்படுத்த முடியாம இருக்குது. ( சக்கரைனா சின்ன பசங்களுக்கு மட்டுமில்ல, நுண்ணங்கி வகைகளுக்கும் ரொம்ப புடிக்கும், அதனால தான் காயம் ஏதும் சக்கர வியாதி உள்ளவங்களுக்கு வந்தா சீக்கிரமா ஆறாது)
 
உண்மையில diabetes அல்லது நீரிழிவு நோய்ல ரெண்டு வகை இருக்குது.
1.       type 1 diabetes ( இன்சுலின் சார்ந்த நீரிழிவு, IDDM (insulin dependent diabetes)
2.       type 2 diabetes (இன்சுலின்ல சாராத நீரிழிவு, NIDDM (non- insulin dependent diabetes)
 
நாப்பது வயசானா நாய்குணம் வரும்பாங்க. ஆனா அந்த குணம் வருதோ இல்லையோ நிறைய பேருக்கு துரதிஷ்டவசமா type 2 diabetes வருது.
அப்போ சில நேரத்துல சின்ன பசங்களுக்கு கூட வருதுனு கேள்வி பட்டிருக்கும். அது பெரும்பாலும் முதல் வகை. கெளதம் மேனனோட “ பச்சைக்கிளி முத்துச்சரம்” படத்துல வர்ற சின்னபையன் கதாபாத்திரம் இதுக்கு உதாரணம். இவங்க இன்சுலின் ஊசி போட்டுக்குவாங்க. வழமையா ஊசி ரத்தத்துக்கு தான் ஏத்துவாங்க. ஆனா இவங்களுக்கு தசைக்குள்ளுக்கு தான் அனுப்புவாங்க. மாத்திரைகளை விழுங்குறது அவ்வளவா பயன்தராது. இவங்க மெலிஞ்சு போவாங்க, நீரிழப்பு அதிகமா இருக்கும், களைச்சுப் போவாங்க, ராத்திரி சிறுநீர் கழிப்பாங்க, அடிக்கடி சிறுநீர் கழிப்பாங்க...இன்னும் எவ்வளவோ இருக்கு.. ( ரொம்ப டர்ர் அ கிளப்புரானே)

அப்போ ரெண்டாவது வகைக்கு; இங்க பொதுவா எந்த அறிகுறியும் ஆரம்பத்துல தென்படுறது இல்ல. ஆனா உடம்பு களைச்சு போறது மாதிரி சில விஷயம் பார்க்க கூடியதாக இருக்கும்.இவங்களுக்கு சாப்பாடு மூலமா கட்டுபடுத்தலாம். இன்சுலின் சில நேரத்துல தேவைப்படும். மருந்து முக்கியம்.

என்னென்ன காரணங்கள் diabetes க்கு காரணமா அமையுது.
1.       பரம்பரை
2.       பால் (ஆணா/ பெண்ணா): இளம் வயசுல ஆண்களுக்கு தான் risk அதிகம்னாலும். குழந்தை பேறுக்கு அப்புறமா பெண்களுக்கும் ஆபத்து இருக்கு)
3.       Obesity ( உடல் எடை அதிகமா இருக்கிறது)
4.       சாப்பாடு ( நேரடியா தொடர்பில்லை னாலும் இதுக்கும் மேல சொன்ன obesity கும் தொடர்பு இருக்கிறது சின்ன புள்ளைக்கும் தெரியும் ( அட்ரா அட்ரா நாக்க முக்க party இல்லிங்கோவ்)
5.       தொற்று (infection): முக்கியமா staphylococcus (Italics பண்ணி இருக்கொமில்ல)...இந்த பாக்டீரியா தான் நம்ம தோலில’ நிறைய இருக்கு
6.       மன அழுத்தம்
இப்டி பல காரணம் சொல்லலாம்..

சரி..அப்போ வந்துட்டா இல்லாட்டி வர்றதுக்கு முன்னுக்கு ஜாக்கிரதையா இருக்குறது எப்படி?
சாப்பாட்டில் கவனம் தேவை
a.       சக்கரைய தவிர்த்துகுங்க
b.      நார் சத்துள்ள சாப்பாடு ( இப்ப நம்ம ஊர்ல நிறைய பேரு ஆட்டா மாவு வாங்குறத பாக்க கெடைக்குது, பழங்கள் ( ரொம்ப பழுத்த இனிப்பான பழம் வேணாம் ராசா))
c.       குறைஞ்ச GI (glycemic index) உள்ள சாப்பாடு ( இத பத்தி அப்புறம் விளக்கமா எழுதுறேன், சுருக்கமா சொன்னா GI அதிகமா இருந்தா இரத்தத்தில சீனி வேகமா கூடும்) நம்ம ஊர் கடைகள்ல உள்ள badabath (வேகவச்ச அரிசி, தீட்டாத steam naadu) நல்லது)
d.      சோயா உணவுகள் நல்லது, ( இன்னும் நிறைய இருக்கு, கொஞ்சம் தேடுங்க)
e.      you shouldn’t fast or feast...அப்டின்னு சொல்லுவாங்க, அதாவது நோய் உள்ளவங்க பட்டினி கிடக்காதிங்க...அதே நேரம் மூக்கு பிடிக்க சாப்பிடவும் வேணாம்
உடற்பயிற்சி ரொம்ப முக்கியம் ( இது உங்க கிட்ட இருக்கிற கொஞ்சநஞ்ச இன்சுலின மிச்சபடுத்த உதவும்)
வேற...வந்துருசின்னு தெரிஞ்சா கண்டிப்பா ஒரு டாக்டர பார்த்து மருந்து எடுக்கிறது ரொம்ப நல்லது....(ம்ம்ஹும்)
இப்போ நான் முடிவா என்ன சொல்றது..நாளைக்கே போய் உங்க இரத்தத்த பரிசோதன பண்ணிக்குங்க...சரீங்களா...நல்ல புள்ளங்கலாட்டம் comment பண்ணிட்டு போங்க..
டிஸ்கி: இங்கு நான் எழுதியது பாமர மக்களுக்கும் போய் சேரவேண்டிய நோக்கிலேயே..ரொம்ப ஆழமாக நான் போகவில்லை.இதுவே கொஞ்சம் அதிகப்படியாக உள்ளது என என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

 





6 comments:

  1. நீங்க டாக்டரோ...? கம்பவுண்டரோ...? உங்க தகவல்கள் எல்லாம் நல்லா இருக்குது...! ம்ம்ம்ம்.... நடக்கட்டும்.....! அருமை...!

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள்!!!(கேட்டுக் கொண்டதுக்கிணங்க)....

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள் வித்யன்... நல்ல தகல்வல்களதான் சொல்லியிருக்கீங்க..

    ReplyDelete
  4. மிக்க நன்றி Dr. Butti Paul ..உங்க ஆதரவு என்றென்றும் வேண்டும்

    ReplyDelete