Pages

Saturday, June 2, 2012

நானும் ராஜாவும்!



இசைஞானி இளையராஜா அவர்களுக்கு இந்த ஞான சூனியத்தின் பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்!

ஞானம் என்பதே கொஞ்சம் தாமதமாகத்தானே எல்லோருக்கும் வரும். அது எனக்கும் ஒரு காலத்தில் வரட்டும்.



சின்ன வயசுல இருந்தே எனக்கு பாட்டுன்னா உசுரு. எப்பவும் ஏதாவது அலைவரிசைல பாட்டு வீட்டுல போய்கிட்டு தான் இருக்கும். அப்போ ஏது உருப்படியான தமிழ் தொலைகாட்சிகள் நம்ம நாட்டுல இருந்துச்சு! VCR ல படம் பார்ப்பதோட சரி. ஹையா ரஜினி பாட்டுன்னு ஆடுன பய தானே நான்.

நான் வளர வளர கேக்குற பாட்டுகளும் மனசுக்குள்ள பதிஞ்சிகிட்டே இருந்தது. அதெல்லாம் இந்த இசை மேதையின் பாட்டுன்னு எனக்கு எங்க தெரியும். ஆனா கேட்டுகிட்டு இருந்திருக்கேன். பாட்டு ஞாபகமா பாட தொடங்குன காலத்தில வந்தவரு தான் நம்ம இசை புயல். ரோஜா,ஜென்டில்மேன்,காதலன்னு இசைபுயல் பட்டைய கிளப்பிட்டு இருந்தாரு.முதல் தடவையா புயலு கிராமத்து இசையில கலக்குன கிழக்கு சீமையிலே பட பாட்டு கேசட்ட தேய தேய நாவலப்பிட்டி ல இருந்து கதிர்காமம் வரைக்கும் கேட்டு கேட்டு கடைசில van driver கடுப்பாகி திரும்பி வரும்போது அவரோட கேசட்ட போட்டு நுவரெலியால இருந்து தூங்கவச்சாரே.( ஹீ ஹீ ஹீ)

ரொம்ப சுலபமா பாட்டு எல்லாம் பாடமாகிடும்.(என்ன AL Biology Note மட்டும் பாடமாகாது) ரகுமான் பாட்டு எல்லாம் அத்துப்படி. எல்லா ஆல்பமையும் ஒரு பாட்டு விடாம பாடிகிட்டு வர்றது ( கிட்டத்தட்ட ஒரு MP3 Player கணக்கா) நம்ம பழக்கம்.

ரகுமான் பாட்டு ஸ்கூல் வேன்ல போகும்போதும் விடல.ஜோடி, ஜீன்ஸ், படையப்பா னு ஒரு அல்பமையும் நம்ம Van driver விட மாட்டாரு. காலைல ஒரு பாட்ட கேட்டா அது நாள் முழுக்க நம்ம மனசுக்குள்ள ஓடிகிட்டே இருக்கும்ல, அது மாதிரி கிளாஸ் ரூம்ளையும் பாட்டு தான். மியூசிக் பீரியட் நமக்கு வசதியா போச்சு. ( அதான் இன்னைக்கி வரைக்கும் உருப்படியா சங்கீதம் படிக்கல, OL ல A போட்ட புண்ணியவான் வாழ்க)
இப்போ தான் புயலுக்கு கொஞ்சம் இறங்குமுகம். பாட்டுகளில நம்ம ஈர்க்குற “அட” ன்னு சொல்ல வெக்கிற ஏதோ ஒன்னு குறஞ்சிகிட்டே வந்துது. இப்போ நம்மள ஈர்த்தவரு வித்யாசாகர். எல்லா படத்துலயும் அவரோட மெலடி பாட்டு ஒன்னு இருக்கும் ..ரொம்ப பிடிச்சது... ( ரன் படம், இன்னமும் எனக்கு பிடிச்ச படங்கள்ல ஒன்னு)

இதுக்கு முன்னாடியே டிவி ல சப்தஸ்வரங்கள்,அபூர்வ ராகங்கள் நிகழ்ச்சிகள பார்த்துக்கிட்டு இருந்தப்போ, பாடுரவங்கள்ள இருந்து ஜட்ஜ் பண்ண வர்றவங்க வரைக்கும் இளையராஜா இளையராஜான்னு சொல்லிக்கிட்டு இருப்பாங்க. ( அப்போவும் நாம அதே ஞான சூனியம் தானே).எவ்வளவோ புது பாட்ட நம்ம FM ல ( அப்போ எனக்கு ரேடியோன்னா சூரியன் fm தான்) கேக்குறோம் டிவி ல பாக்குறோம்..இந்த பய பக்கிக ஏன் போயும்போய் ராஜா பாட்ட பாடுரங்கன்னு எனக்கு புரியல.

இந்த காலத்துல நெறைய பழைய பாட்டுகள ரீமிக்ஸ் பண்ணி படம்( பணம்) பண்ணுற ஒரு கும்பல் இருந்தது. இத கேக்கும்போது இருந்த துள்ளலான இசைக்கு நடுவில கேட்பதட்கரிய ஒரு பொக்கிஷம் இருந்தது. அதான் வித்யாச வித்தியாசமான டியுன்கள். என்னை ரொம்பவே சிலாகிக்க வெச்சது. (லேட் பிக்கப் டா நீயி)..கேக்கும்போது சுலபமா இருந்தாலும் பாடும்போது தான் அந்த கஷ்டம் தெரிஞ்சுது.நெறைய நண்பர்கள் கிட்ட இப்பவும் சொல்லி இருக்கேன், இந்த மனுஷனோட ட்யூன்லாம் கத்தி மேல நடக்குற மாதிரி. உருப்படியா பாடலன்னா டியுனே மாறிடும்). ரேடியோல அறிவிப்பாளர் இது யார் இசையமச்ச பாட்டுன்னு சொல்லுறதுக்கு முன்னாடியே கண்டுபிடிக்கிற பாட்டுன்னு சொல்லும் தெறம (????) வந்தத அப்பத்தான் உணர்ந்தேன்.

 நம்மள ஆரம்ப காலத்துல ஈர்த்தவாளோட ட்யூன் பல்லவில மட்டுமே எடுப்பா இருக்க, சரணத்திலையும் வரிக்கு வரி வித்தியாசம் வித்தியாசமான அழகான இசைக்கோர்வைகள் எனக்கு ஜென்ம சாபல்யம் கொடுத்தது. இதுக்கெல்லாம் சொந்தகாரர் நம்ம பண்ணைபுரம் பகவான் தான் பான்னு தெரிஞ்சதும் தேடி தேடி பழைய பாட்டுகள (ரீமிக்ஸ் களின் உண்மை வடிவம்) கேக்க கேக்க..இதுதாண்டா இசைன்னு சொல்லவச்சது. பாட்டு மட்டும் இல்லாம நடுவில வர்ற இசையமைப்புகளும் அப்படியே கட்டிபோட்டுச்சு.

படங்கள்ல பாட்டுக்கு போடுறது மட்டும் இல்ல பின்னணி இசையும் எவ்வளவு முக்கியம்னு தெரிஞ்சிகிட்ட காலம் இதுதான். எவ்வளவு அழகான இசை சேர்க்கைகள். BGM (Back ground Music) ல அடிச்சிக்க இந்தாளுக்கு ஈடா இன்னொருத்தன் பொறந்து வரணும்யா.(முக்கியமா மௌன ராகம் தீம் மியூசிக், புன்னகை மன்னன் தீம் மியூசிக் ( இது ரஹ்மானாமே). காட்சி சுமாரா இருந்தாலும் அதுக்கு இவர் போடுற டியூன் உலகதரம்..இவர் இசைக்காகவே பல படம் சூப்பர் ஹிட் ஆகியிருக்குன்னா பாருங்க...
பாடகர்களுக்கு இவர் போடும் ட்யூனை மட்டுமே போதுமானது..வேறெந்த IMPROVISATION உம தேவைப்படாது. இத அவர்களே சொல்லி இருக்காங்க.சூப்பர் சிங்கர் ( விஜய் டிவி) ல பாடுற பாடகர்கள் இவர் புகழ் பாட பாட..நடுவுல நம்ம கெளதம் மேனன் படங்கள்ல வர்ற ஹீரோக்களும் இவர் புகழ் பாட பாட., ம்ம்ம் நாம இப்போ தான் சரியான பாதையில போறோம்குறத உணர்த்துச்சு.

மனுஷன் 80 களில்நீதானே என் பொன்வசந்தம் போட்ட ட்யூன்கள் பிரமாதமா இருந்ததுக்கும் 90 களுக்கு அப்புறமா கொஞ்சம் சறுக்கினதுக்கும் காரணம் நல்ல வேலை வாங்க தெரிந்த இயக்குனர்கள் இவரிடம் சிக்காமைன்னு நினைக்கிறேன்..இவர் மாதிரி ஒருத்தர் கிட்ட இப்படி ட்யூன் போடு அப்படி போடுன்னு சொல்ல தான் முடியுமா?
நீதானே என் பொன்வசந்தம்..ரொம்ப நாளைக்கு அப்புறம் ஞானிஇடம் வேலை வாங்க தெரிஞ்ச ஒரு இயக்குனர் மாட்டி இருக்காரு..பாட்டெல்லாம் கண்டிப்பா காலை வாராதுன்னு நம்புறேன் பா.. (Trailerum, Music promo வும் புதுமையா இருந்தது, நம்பிகையைப் பலப்படுத்துது)

டிஸ்கி1: என் IPOD காணாம போன நாள் என்ன ரொம்பவே உலுக்கிடுச்சு..கஷ்டபட்டு அழகழகா ராஜா பாடல்கள PLAYLIST போட்டு வெச்சிருந்தேன்..தூக்குனவன் எங்க இருந்தாலும் நல்லா(நறநற) இருப்பான்..இப்போ தான் நிம்மதியா இருக்கேன்..(ஏதோ போன்லயாவது கேக்க முடியுதே)

டிஸ்கி 2: பாடல்கள அழகான பாடல்கள்னு சொல்ல கூடாதாம் ..இனிமையான பாட்டுன்னு தான் சொல்லனுமாம்..எனக்கு இதுல கொஞ்சமும் உடன்பாடு கிடையாது..இந்த மேதயோட மணி மணியான இசையமைப்புகள் கேட்பதற்கு மட்டும் இல்ல..எல்லா புலனங்கத்துக்கும் தான்..அந்த அழக அனுபவிச்ச தான் புரியும்...







5 comments:

  1. உமது இ(ம்)சை பயணம் தொடர வாழ்த்துக்கள் .....

    ReplyDelete
    Replies
    1. இனிமே எல்லாம் இப்படித்தான்

      Delete
    2. அப்படித்தான்...
      இனிமே அப்படித்தான்...

      Delete
  2. அனுபவத்தையும் தகவல்களையும் அருமையாக கோர்த்திருக்கிறிர்கள்...

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    தென்னிந்தியக் கலைஞர்களின் ஈழவருகையின் சாதகமும் பாதகமும்

    ReplyDelete
    Replies
    1. நன்றி! மீண்டும் வருக!

      Delete